புதுச்சேரி, மே 14 புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையொட்டி புதுச்சேரி மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா துணைநிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று (13.5.2026) காலை நடந்தது.
இதில் புதுவை மாநில முதலமைச்சராக 5-ஆவது முறையாக ரங்கசாமி பதவியேற்றார். அவருடன், அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம், என்ஆர் காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பதவியேற்றனர். முதலமைச்சர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், சந்தோஷ்ஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் முன்னதாக அங்கும் வழக்கு போல் முதன்மையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படாமல், வந்தே மாதரம் அடுத்து நாட்டுப்பண் மூன்றாமிடத்தில் தமிழ் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது புதுச்சேரி மக்களிடம் எதிர்ப் புணர்வைத் தோற்றுவித்துள்ளது.
