பயணிகள் பாதுகாப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் வரும் 13 முக்கிய ரயில் நிலையங்கள்!

1 Min Read

சென்னை, மே 14-  பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைப் பலப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் பூங்கா நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங் களில் 495 கண்காணிப்புப் படக் கருவிகள் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறு கின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் உட்பட பல்வேறு புறநகர் ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கண்காணிப்புப் படக் கருவிகளை நிறுவி, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த நிதியாண்டில் மட்டும், எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, கவரைப்பேட்டை, வில்லிவாக்கம், கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, புட்லூர், ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சி பனம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மற்றும் மணவூர் ஆகிய 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்புப் படக் கருவிகள் செயல் பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் நிகழ்நேர கண்காணிப்புத் திறனை மேம்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 13 ரயில் நிலையங்களில் கண்காணிப்புப் படக் கருவிகள் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறு கின்றன.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்புப் படக் கருவிகள் நிறுவி, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அந்த வகையில், பூங்கா நகர், தண்டை யார்பேட்டை, கொருக்குப் பேட்டை, கத்திவாக்கம், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், அம்பத்தூர், வேப்பம்பட்டு, மோசூர், புளியமங்கலம், திருத்தணி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட 13 முக்கிய ரயில் நிலையங்களில் 495 கண்காணிப்புப் படக் கருவிகளை நிறுவும் பணி தற்போது நடைபெறுகின்றன.

இதன் மூலம் பயணிகள் மற்றும் செயல்பாட்டு மண்டலங்களில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *