லக்னோ, நவ. 4- உத்தர பிர தேச மாநிலத்தில் உள்ள பண்டா கிராமத்தில் ராஜ்குமார் சுக்லா என்ற நபரின் வீட்டில் வேலை செய்வதற்காக 40 வயது தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அந்த பெண்ணின் 20 வயது மகள், ராஜ்குமார் சுக்லாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த ஒரு அறையில் இருந்து தனது தாயின் அலறல் சத்தம் கேட்டதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த அறைக் குச் சென்று பார்த்த போது அங்கு அந்த பெண்ணின் உடல் 3 துண்டுகளாக வெட் டப் பட்டு கிடந்துள்ளது.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவலர்கள் ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராம கிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் உயர்ஜாதியின ராக இருப்பதால் அவர் களை கைதுசெய்யாமலும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தியும் வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகி லேஷ் யாதவ், உத்தரப் பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத் தில் பதிவிட்டுள்ள அவர், தாழ்த்தப்பட்ட சமுகத் தைச் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக வும், காவல்துறையினர் இந்த வழக்கில் மெத்தன மாக இருப்பதும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மிகுந்த பயத் துடனும், கோபத்துட னும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.