வணிக எரிவாயு உருளை விலை உயர்வால் சென்னையில் தங்கும் விடுதிகளில் வாடகை 10 சதவீதம் அதிகரிப்பு

2 Min Read

சென்னை, மே 8 சென்னையில் வணிக எரிவாயு உருளைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தங்கும் விடுதிகளின் (ஹாஸ்டல்)   வாடகையை அவற்றின் உரிமை யாளர்கள் 10 சதவீதம் வரை உயர்த்தி யுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்கள், வேலைக்கு வரும் இளைஞர்கள் ஹாஸ்டல் போன்ற தங்கும் விடுதிகளில் தங்கி தங்களது படிப்பையும், வேலையையும் தொடர்கின்றனர்.

அந்த வகையில் சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்றன. அதில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வணிக எரிவாயு உருளைகளின் விலை கடுமையாக உயர்ந்ததால், விடுதிகளின் வாடகை 10 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அய்டி விடுதி  உரிமையாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “அமெரிக்கா – ஈரான் போர் காரண மாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1,899 ஆக இருந்த 19 கிலோ வணிக எரிவாயு உருளை விலை தற்போது ரூ.3,258 ஆக உயர்ந் துள்ளது.

இதனால் சமையல் செலவுகள் கட்டுப்படியாகாததால், சென்னையில் ஹாஸ்டல், வாடகை 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. அதன் படி குளிர்பதன அறைகள் (AC) இல்லாத தங்குமிடத்துக்கான மாதாந்திர கட்டணம், 4 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.6,500-இல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் 3 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாகவும், 2 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.8 ஆயிரத்தி லிருந்து ரூ.9 ஆயிரமாகவும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.

இவை அடிப்படை விலைகள்தான், இருப்பிடம் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப வாடகை மாறுபடலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவ ரங்களின்படி, விடுதிகளின் வாடகை  அமல்படுத்தப்படும் என கூறப் படுகிறது.

பெரும்பாலும் எரிவாயு உருளைகள் கிடைக்காததால், கள்ளச் சந்தையில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கொடுத்தே எரிவாயு உருளைகளை பெற வேண்டியிருப்பதால் தங்கும் விடுதிகளின் வாடகையை கூட்டு வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் விடுதிகளின் வாடகை அதிகரிப்பு இளைஞர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *