ஒன்றிய அரசு வேலை: 3,003 காலிப்பணியிடங்கள்

2 Min Read

எஸ்எஸ்சி தேர்வுக்கு தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழியில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம்.

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ‘செலக்‌ஷன் போஸ்ட் ஃபேஸ் 14’ (Selection Post Phase 14 – 2026) அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த வர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியான பதவிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழியில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 11 முதல் 13ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்ப தாரர்கள் SSC-யின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், மற்றும் ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித் தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு மதிப்பெண்கள்?

கணினி வழியிலான எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். கேள்விகள் கொள்குறி வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற, ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாகும். அதன்படி:

  • பொதுப் பிரிவினர் – 30%
  • ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் – 25%
  • எஸ்சி/ எஸ்டி மற்றும் இதர பிரிவினர் – 20% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு எப்போது?

இந்தத் தேர்வு ஜூன் மாதம் உத்தேசமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 309 3063 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தேர்வர்கள் தொடர்புகொள்ளலாம்.

கடைசி நாள்களில் இணையதளத்தில் ஏற்படும் சர்வர் நெரிசலைத் தவிர்க்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப் பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களை அறிய: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *