தேர்தல் முடிவுகளை இளைஞர்கள் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் முன்னாள் நீதிபதி கிருபாகரன் அறிவுரை!

1 Min Read

சென்னை, ஏப். 29- தேர்தல் முடிவுகளை இளைஞர்களும், குழந் தைகளும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கிருபாகரன் கூறினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் பாரிமுனையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இயல்பான மனநிலை

தேர்தல் களம் என்று வந்து விட்டால் ஏதேனும் ஒரு கட்சிதான் வெற்றி பெற முடியும்; நான்கு பெரிய கட்சிகளும் ஒரே நேரத்தில் வெற்றி பெற இயலாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். தனது தலைவரோ, கட்சியோ தோற்றுவிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் இயல்பான மனநிலை இளம் தலைமுறையினருக்கு வேண்டும்.

“இந்திரா காந்தி, அண்ணா, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களே தேர்தலில் தோல் வியைத் தழுவியுள்ளனர். எனவே, தோல்வி என்பது நிரந்தரமல்ல.”

வாக்கு எண்ணிக்கைக்கு முன்ன தாகவே, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் ஒருமித்த குரலில் ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும். அதில், “வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள்; தோல்வி அடைந்தால் அடுத்த தேர்தலுக்குத் தயாராகுங்கள்” என இளைஞர்களுக்கு அறிவு றுத்த வேண்டும்.

தற்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு சமூக வலைதளங்களே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பிரத்யேக உதவி மய்யங்களை அமைக்க வேண்டும்.

அரசியல் சாயம் வேண்டாம்:

நான் குறிப்பிட்ட ஒரு கட்சியின் ரசிகர்களையோ அல்லது கட்சியையோ மட்டும் சுட்டிக் காட்டவில்லை. இது ஒட்டுமொத்த சமூகத்தின் பொதுப் பிரச்சினை. தவறான முடிவுகளைத் தவிர்க்கவும்: தோல்வியால் துவண்டுபோய் இளைஞர்கள் எந்தவொரு தவறான முடிவையும் எடுக்கக் கூடாது.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் அதன் மாண்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவற்றை கல்விப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை விதைக்காமல், ஆரோக் கியமான ஜனநாயகப் பண்பை வளர்க்க அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது உரையின் சாரமாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *