சென்னை, ஏப். 28- புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம் குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
புதுச்சேரியில்
பிரெஞ்ச் மொழி நீக்கம்
ஒன்றிய அரசின் இடை நிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) இயக்குநர், புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என சுற்றறிக்கை வெளி யிட்டுள்ளார். இதனை 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு ஆழமான வரலாற்றுத் தொடர்புடையது. இன்றும் அங்கு இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதிப்பு
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பிரெஞ்ச் மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர்கள் கவலை: இப்பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
“புதிய மொழிக் கொள்கையைக் காரணமாகக் காட்டி, பிரெஞ்ச் மொழியை அகற்றும் பணியில் ஒன்றிய பாஜக அரசு முனைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் அங்கு பிரெஞ்ச் மொழி கற்பிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்
