சென்னை, ஏப். 27- ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர் களின் பிறந்த நாளான இன்று (27.4.2026) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 175ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2026) காலை 10.30 மணியவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவரின் சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோவீ.ராகவன், மேற்கு சென்னை மாவட்ட தலைவர் கரு. அண்ணாமலை, வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிச்செல்வி, உமா செல்வாஜ், பசும்பொன் செந்தில்குமாரி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் செல்வராஜ், செல்லப்பன், பி.சி.ஜெயராமன், தாம்பரம் மோகன்ராஜ், க.தமிழ்ச்செல்வன், சீர்காழி இராமண்ணா, தி.செ.கணேசன், பெரியார் இனியன், பெரியார் ஆதவன், மகேந்திரன், சோளிங்கநல்லூர் ராஜேந்திரன், சூளைமேடு ராஜேந்திரன், மு.சேகர், கலைச்செல்வன், கோ.தங்கமணி, அய்ஸ்அவுஸ் அன்பு, ஜனார்த்தனன், பா.கோபாலகிருஷ்ணன், பொன்.மாடசாமி, மகேஷ், வை.கலையரசன், மு.இரா.மாணிக்கம், இராவணன், இளவரசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

