“பெரியாரியல் பயிற்சி பட்டறை”யில் “வகுப்புகளைச் சிறப்பாக கவனித்து நன்றாகக் குறிப்பு எடுக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில், தருமபுரியைச் சேர்ந்த பெ.கோகிலா முதல் பரிசையும், தருமபுரி வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த கு.ஹரிஹரன் இரண்டாம் பரிசையும், தருமபுரி ஏமாரப்பூர் பகுதியைச் சேர்ந்த ச.ஹேமா மூன்றாம் பரிசையும், வேப்பநத்தம் பெ.அக்சயா நான்காம் பரிசையும், திருப்பத்தூரைச் சேர்ந்த எம்.எஸ்.கமலேஸ்வரி அய்ந்தாம் பரிசையும், தருமபுரி வே.முத்தம்பட்டியைச் சேர்ந்த ப.சுமதி ஆறாம் பரிசையும் பெற்றனர். பரிசுகளை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி, மாணவர்களை ஊக்குவித்தார்.

