கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது!

தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை!

சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் கோடைக் காலத்தின் தொடக்கத்திலேயே மின்சாரத் தேவை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தேவை அதிகரிப்பது இயல்பு என்றாலும், இந்த ஆண்டு மின் நுகர்வு ஏற்கனவே 21 ஆயிரம் மெகாவாட் என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தாண்டியுள்ளது.

வீட்டுப் பயன்பாடு

கோடை வெப்பத்தைச் சமாளிக்க வீடுகளில் குளிர்சாதன வசதிகளின் (ஏசி) பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் சீரான இயக்கம். விவசாயப் பணிகளுக்காக வழங்கப்படும் தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டின் மின் தேவை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மின் தேவை 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாக உயர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், அடுத்த மாதம் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடையற்ற மின்சாரம்

இந்த எச்சரிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், தமிழ்நாட்டில்  தடையற்ற மின்சாரம் வழங்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளன. மின் தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிச்சந்தையிலிருந்து நிலக்கரி மற்றும் வெப்ப மின் நிலையங்கள் மூலம் கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எனவே, மின் தடையின்றி வழங்க வழிவகை செய்யப்படும்.” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தேவை உச்சத்தை எட்டியுள்ள போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் கூடுதல் மின் கொள்முதல் மூலம் தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *