பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்து உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு 2024 இல் ‘இந்தியா’ கூட்டணி முடிவு கட்டும்!
– காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
தினமலரின் பதில்: நடப்பாண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து பயிர்கள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, இவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதுதான் உண்மை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும், இதுதான் நடந்திருக்கும் என்பதிலும் ‘டவுட்டே’ இல்லை. இதை மத்திய அரசின் தோல்வி என்று திசை திருப்புவது நியாயமா?
– ‘தினமலர்’, 3.11.2023, பக்கம் 8
நமது பதிலடி: காங்கிரஸ் ஆட்சியில் ‘தினமலர்’ குறிப்பிட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்திருந்தால், இதே பதிலை ‘தினமலர்’ கூறுமா?