கைவினை-கலைப் பொருட்களை உருவாக்குவது எப்படி?

2 Min Read

‘‘நான் பிறந்தது கேரளா பாலக்காடு சித் தூரில். எங்களுடையது விவசாய குடும்பம். அப்பா, அம்மா இருவருமே விவசாயம் தான் பார்த்து வந்தார்கள். பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தேன்’’ என்று கூறும் சசிகலா பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து வருகிறார். இவரின் ஒவ்வொரு கைவினைப் பொருட்களும் வித்தியாசமாகவும் அதே சமயம் கண்களைக் கவரும் வண்ணம் உள்ளது. இவர் கைவி னைப் பொருட்கள் செய்வதை தன்னுடைய தொழிலாக மாற்றியது குறித்து விவரிக்கிறார்.

மணல், கல், பெயின்ட், அட்டைப் பெட் டிகள், கம்பி  மற்றும் வீணாகும் பொருட்களை வைத்துதான் என்னுடைய கைவினைப் பொருட்களை தயாரிப்பேன். ஒவ்வொரு கைவினைப் பொருட்களை செய்யும்போதும் வெவ்வேறு பொருட்கள் தேவைப் படும்.  அதேபோல் ஒவ்வொன்றையும் செய்யக்கூடிய நேரமும் மாறுபடும். சிலவற்றை அரை மணி நேரத்தில் செய்து முடித்திடுவேன். அதே சமயம் ஒரு சில அலங்காரப் பொருட்கள் செய்ய இரண்டு மாதங்கள் கூட ஆகும்.

ஒவ்வொன்றையும் மிகவும் பொறுமையாகவும்,  நுணுக்கமாகவும் செய்ய வேண்டும். அதனால் அதை செய்யும் போது மட்டும் எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் முழுக் கவனத்துடன் செய்ய வேண்டும். அப்பதான் அதற்கு முழு வடிவத்தினை கொடுக்க முடியும். சில சமயம் என்னுடைய முழு நேரமும் இதற்காக மட்டுமே செலவு செய்திருக்கிறேன். ஒரு சில கைவினை கலைப் பொருட்களை பல நாட்கள் இரவு பகல் பாராது கணவர் மற்றும் மகனின் ஒத்துழைப்புடன் செய்து முடித்திருக்கிறேன்.

எனது கைவினை கலைப் பொருட்களால் என் வீடு முழுக்க அலங்காரம் செய்திருப்பதைப் பார்த்து வீட்டிற்கு வரும் உறவினர்கள், கணவரின் நண்பர்கள், என் தோழிகள் எல்லாரும் தங்களுக்கும் செய்து தரும்படி கேட்பார்கள். அதற்காக விலையும் கொடுக்க முன்வருவார்கள். எனக்கு என் பொருட்களை விற்பனை செய்ய விருப்ப மில்லை. அப்படியும் சிலர் கட்டாயப்படுத் தும் போது, அதை அவர்களுக்கு பரிசாக கொடுத்திடுவேன்” என்றவர் தான் உருவாக்கி இருக்கும் கைவினைப் பொருட்கள் குறித்து விவரித்தார்.

ஆலிலையை வைத்து ஒரு அழகான கலைப் பொருளை செய்யலாம். ஆலி லையை இருபத்தி மூன்று நாள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதற்கு வண்ணம் தீட்டினால் அவ்வளவு அழகாக இருக்கும். அதை நீளமான விளக்குமாறு குச்சியில் பொருத்தினால் பார்க்க மயில் தோகை போல் காட்சியளிக்கும். பேப்பர், அட்டைப் பெட்டி, தெர்மாகோல், பிளைவுட், பிவிசி பைப், மணல், கல் வைத்து பலவித கை வினைப் பொருட்களை உருவாக்கி வருகி றேன். மொசைக் கல்லையும் அழகாக மாற்றிடுவேன். இவ்வாறு உணவகங்களில் பார்சல் கட்டி வரும் சில்வர் பேப்பர், திருமண பத்திரிகையையும் அழகான கைவினைப் பொருளாக மாற்ற முடியும்.

இவை அனைத்துமே என்னுடைய கற்பனையில் தோன்றிய விஷயங்கள்தான். அதற்கு நான் ஒரு முழு உருவம் கொடுத் திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இது போன்று வீணாகும் பொருட்களைக் கொண்டு பலவிதமான கைவினைப் பொருட்களை உருவாக்கி அதனை கண் காட்சியாக அமைக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்கால லட்சியம்’’ என்றார் சசிகலா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *