அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து புகார் உத்தரவைத் திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்!

சென்னை, ஏப்.13- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய பரபரப்பான சூழலில் மூத்த அரசு அதிகாரிகள் சிலர், தேர்தல் நேரத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒருதலைபட்சமாகவும் நடந்து கொள்வதாகவும் அதிமுக, பா.ஜ.க, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தன. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி தலைமைச் செயலாளர்
ந. முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், சந்தீப் மிட்டல் பல்வேறு விதமான புகார்களுக்கு உள்ளானவர் என்றும், அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்பு மற்றும் சிந்தாந்த ஆதரவு கொண்டவர் என்றும், எனவே தேர்தல் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி வழங்கிய உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. அதாவது சந்தீப் மிட்டல் மீது பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தலைமை இயக்குநராக தொடர்வார் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஆயுதப்படை காவல்துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் மீண்டும் அதே பணிக்குச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டேவிட்சன் தேவாசீர்வாதம் தன்னுடைய பழைய பொறுப்பிற்கு மீண்டும் சென்றுள்ளார். அதே போல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சந்தீப் மிட்டல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *