சென்னை, ஏப்.6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத் தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என திட்ட வட்டமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ் உணர்வு கொண்டவர்கள், விவசாயிகள் மீது அக்கறை கொண்ட வர்கள் பாராட்டியுள்ளனர்.
2011இல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அடிப்படை காரணம் க்ஷிகிஜி வருமானம் உயரும் என்றே, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் போடப்பட்டிருந்தது. மீத்தேன் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படவே இல்லை. மீத்தேன் திட்டத்திற்கு லைசென்ஸ் காலம் முடிந்த திட்டத்திற்கு ரத்து செய்ததாக அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது .மக்களுக்கு பாதிப்பு வரும் எந்தத் திட்டத்தையும் நிறை வேற்ற மாட்டோம் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தோம். மீத்தேன் திட்டத் திற்கு பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. எடப் பாடி பழனிசாமி ஏகடியம் செய்வது எந்தவகையில் நியாயம்? நெடுவாசலில் விவசாயிகளை அடக்குவதற்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்ன செய்தது என்பது அறிந்ததே. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.