புதுடில்லி, ஏப்.7 அய்பி அட் ரஸ்’ எனப்படும் ஒரே இணைய நெறிமுறை முகவரியைப் (Internet Protocol address) பயன்படுத்தி, பாஜக- வினர் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 34 இணையதளங்க ளை நடத்தி வந்தது வெளிச் சத்திற்கு வந்துள் ளது. தனியார் செய்தி சரிபார்ப்பு நிறுவனமான ‘ஆல்ட் நியூஸ்’ (Alt News), ‘மீண்டும் ஒருமுறை மோடி சர்க்கார்.காம்’ (Phir Ek Baar Modi Sarkar.com)என்ற இணையதளம் குறித்த புல னாய்வை மேற்கொண்ட போதுதான், மேற்கண்ட 34 போலி இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங் களைப் பொறுத்த வரை, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி, அதனை உண்மை யாக்கும் ‘கோயபல்ஸ்’ பிரச்சார பாணியைத்தான் ஆரம்பம் முதல் கையாண்டு வருகின்றனர். தங்களுக்குப் பிடிக்காத அரசி யல் தலைவர்களை அவதூறு செய்வதற்கு, பிற நாடுகள், மாநி லங்களில் ஏற்பட்ட வளர்ச்சி களை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திய வளர்ச்சி போல காட்டுவதற்கு- இந்த நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் பின்னால்தான் திரண்டு நிற்கி றார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏராளமான பொய்யையும், புரட்டையும் கட்ட விழ்த்து விடுவதற்கு- போலி இணையதளங்களையும், சமூகவலைதள கணக்குகளை யும் வைத்திருக்கின்றனர். இந்த அடிப்படையில், பாஜக வுக்காக ஒரே நபரே அல்லது ஒரே அய்பி முகவரி மூலமே பல மாநி லங்களில் பல்வேறு பெயர்களில் இணையதளங்களைத் துவங்கி நடத்தி வந்ததை ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளத்தைச் சேர்ந்த அபி ஷேக் அம்பலப்படுத்தி யுள்ளார்.
முகநூலின் தாய் நிறுவன மான மெட்டாவையே நேரடி யாக அணுகி உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். ‘மீண்டும் ஒருமுறை மோடி சர்க்கார்.காம்’ (Phir Ek Baar Modi Sarkar.com) என்ற இணைய தளத்தை முதலில் கண்டுபிடித்த அவர், இந்த இணையதளத்திற் கான அய்பி முகவரியிலேயே, முகநூல் கணக்குகளுடன் இணைக்கப் பட்ட 34 பாஜக ஆதரவு இணையத் தளங்கள் இயங்கி வந்ததை ஆதாரப் பூர்வமாக நிரூபித்துள்ளார். jharkhand2019.com, chormachayeshor.com, ghargharraghubar.com போன்ற பல்வேறு பெயர் களில் வடஇந்திய மாநிலங் களிலும், புதுச்சேரியில் ‘ஒளி ரட்டும் புதுவை.காம்’ எனவும், தமிழ் நாட்டில் ‘வளர்ச்சிப் பாதையில் தமிழகம்.காம்’ என வும் இந்த இணையத்தளங்கள் இயங்கி வந்துள்ளன. இந்த இணையதளங்களை யார் நடத் துகிறார்கள்; யார் விளம்பரம் தருகிறார்கள் என்று பயனர்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில், தங்களின் அடை யாளத்தை மறைத்துக் கொண் டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தும் மாற்றுக் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக- இவ்வளவு காலமும் அவதூறு செய்து வந்துள்ளனர். மோசடி யில் ஈடுபட்டுள்ளனர். தற் போது இவை அனைத் தையும் ‘ஆல்ட் நியூஸ்’ அம்பலப்படுத் தியதை தொடர்ந்து இந்த 34 இணையத்தளங்களில் பெரும் பாலானவை முடக்கப்பட்டுள்ளன.