ஜெயங்கொண்டம், மார்ச் 29- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்கு லேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தி வைத்த டேக்வாண்டோ போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
3ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா பெல்ட் பட்டங்களை பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மாணவர்களின் கடின உழைப்பையும், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியையும் பிரதிபலிக்கிறது.
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினர்.
இந்த பயிற்சியை வழங்கிய ஹிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது.
