சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு

சென்னை, மார்ச் 27 மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது “நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி யறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என உறுதியாக நம்புகிறேன். சோனியா காந்தி அவர்கள் விரைவாகவும், முழுமையாகவும் நலம் பெற விழைகிறேன்.”இவ்வாறு முதலமைச்சர் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.

வைரலாகும் பதிவு: கூட்டணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சரின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து நலம் விசாரித்து வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சோனியா காந்தி மருத்துவ மனையில் தற்போது உடல் நலம் தேறிவருவதாக ராகுல்காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *