

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் இயக்க நூல்களை பேராசிரியர் தவமணி வெளியிட்டார். மாமன்ற உறுப்பினர் (மதிமுக) சித்ரா வெள்ளியங்கிரி தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார். உடன்: கோவை கு. இராமகிருஷ்ணன், இரா. ஜெயக்குமார், ம.சந்திரசேகரன், வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.



குறிச்சி நா. பிரபாகரன் (தி.மு.க.) ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். வழக்குரைஞர் சாக்ரடீஸ் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். தி.மு.க. அய்.டி. பிரிவை சேர்ந்த சுரேஷ் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.




தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. செந்தமிழ்குமார், தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி, தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவருக்குபொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர்.


த.க. யாழினி – அபினேஸ் ஆகியோரின் குழந்தைக்கு இயல்இசை என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். கணியூர் கிருஷ்ணன் மகன் இளந்தென்றல், மதுமிதா ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
