நாகர்கோயில், மார்ச் 11- குமரி மாவட்ட கழக சார்பாக வில்லுக் குறியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் 1.3.2026 அன்று நடைபெற்றது.
பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கினார். குருந்தன்கோடு ஒன்றிய கழக தலைவர் செல்லையன் முன் னிலை வகித்தார்.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரை யைத் தொடங்கிவைத்தார்.
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், திமுக பேரூர் செயலாளர் சகாய கிறிஸ்து தாஸ், திமுக பேரூர் துணைச் செயலாளர் பி.ஜெயவிஜயன், தோழர்கள் தா.ஜெபராஜ், சி.ரெகு மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், துண்டறிக் கைகள், திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
வில்லுக்குறியில் நடைபெற்றப் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
Leave a Comment
