நெய்வேலி மார்ச் 11– நெய்வேலி நகரத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் காமராஜர் சிலை அருகே நடந்தது.
கூட்டத்திற்கு நகர கழக தலைவர் இசக்கி முத்து தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரத்தின சபாபதி வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, நகர இளைஞரணி தலைவர் மாணிக்கவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாச்சலம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் முனைவர்துரை. சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியே தொடரும் என சூளுரைத்தார். அதற்குக் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை நெறிமுறைகளை பின்பற்றி ஆட்சி நடத்தி வருவதால் இன்று இந்தியாவிலே தலைசிறந்த ஆட்சி தரும் தமிழ்நாடு இருந்து வருகிறது என குறிப்பிட்டார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு இளைய தலைமுறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை விளக்கிப் பேசினார்.
