வருங்கால வைப்பு நிதி முன்பணம்: புதிய உச்சவரம்பை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு – அரசாணை வெளியீடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.5 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) விதிகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:அரசு ஊழியர்கள் தங்களது பொது வருங்கால வைப்பு நிதி விதிகளின் கீழ் (விதி 15A), குறிப்பிட்ட காரணங்களுக்காக முன்பணம் பெறும்போது கீழ்க்கண்ட நிபந்தனைகள் பின்பற்றப்படும்: அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரை முன்பணம் பெறலாம்.அல்லது, ஊழியரின் மாதாந்திர ஊதியத்தைப் போல 75 மடங்கு தொகை.மேலே குறிப்பிட்ட இந்த இரண்டில் எது குறைவான தொகையோ, அதுவே முன்பணமாக வழங்கப்படும்.வீடு கட்டும் கடனுக்கான கட்டுப்பாடுகள்: வீடு கட்டும் நோக்கத்திற்காக முன்பணம் பெறும் சந்தாதாரர்களுக்கு புதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: மாநில அரசு, ஒன்றிய அரசு அல்லது பொது/தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடன் தொகையுடன் சேர்த்து, GPF முன்பணமும் பெறப்படும் பட்சத்தில், மொத்தத் தொகை ரூ. 50 லட்சத்தைத் தாண்டக்கூடாது. அதாவது, அனைத்து நிதி ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மொத்த நிதி உதவி ரூ. 50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என திருத்தப்பட்ட துணை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *