சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் அய்.டி.அய். படித்தவர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 அப்ரண்டிஸ் காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்பாக்கம் அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2026
பயிற்சி இடங்களின் விவரம்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பிட்டர் – 10, மெசினிஸ்ட் – 1, டிஜிட்டல் போட்டோகிராபர்/ போட்டோகிராபர் – 1, மெயிண்டனன்ஸ் மெக்கானிக் (கெமிக்கல் பிளாண்ட்) / பிட்டர் – 10, கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிமிங் உதவியாளர் – 3, எலெட்ரீசியன் – 10, இன்ஸ்ரூமெண்ட் மெக்கானிக் – 10, மெக்கானிக் ரெபிரிஜெரேசன் மற்றும் ஏர் கண்டிசனிங் – 3, டிரான்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) – 2.
கல்வி தகுதி: இந்தப் பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் அய்.டி.அய் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 9,600
வயது, தகுதி: 16.03.2026 அன்று 16 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் என்பிசிஅய்எல் (NPCIL) நிறுவனத்தை தேடி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Sr.Manager (HR), Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI), Kalpakkam-603 102, Chengalpattu District, Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2023
