நாகர்கோவில், மார்ச் 3- குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக இது தான் ஆர்.எஸ்.எஸ்_பா.ஜ.க, இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் வில்லுக்குறியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திரா விடர்கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் செல்லை யன் தலைமை தாங்கினார்.
கழக மாவட்டச் செய லாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்து தொடக்கவுரையாற்றினார். தந்தை பெரியாருடைய தொண்டுகள், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிகள், திராவிடர்கழகத்தின் வரலாறுகள், இன்றைய திராவிட மாடல் ஆட்சி யின் சாதனைகள், பா.ஜ.க தமிழ்நாட்டுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். திராவிடர்கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர்,திமுக பேரூர் செயலாளர் சகாய கிறிஸ்து தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக பேரூர் துணை செயலாளர் பி.ஜெயவிஜயன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு சிறப்புரையாற்றினார். தோழர்கள் தா.ஜெபராஜ், சி.ரெகு மற்றும் ஏராள மானோர் பங்கேற்றனர். மாவட்ட கழகத் துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர் நன்றியுரை கூறினார்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப் பட்டன.
