சென்னை, நவ. 5- சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 11 செ.மீ மழை பெய்தது. இருந்தாலும், தேங்கியிருந்த மழை நீர் அனைத் தும் ஒருமணி நேரத்தில் வடிந்துவிட்டது. மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இரண்டு சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது.
எங்கு மழைநீர் தேங்கினாலும், அதனை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மிக கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மரம் சாய்ந்து விழுந்தாலோ, மழை நீர் தேங்கினாலோ, அதனை அப்புறப்படுத்துவதற்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.” இவ்வாறு அவர் பேசினார்.