மேட்டூர், ஏப். 14 சேலம் – எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 4 மாணவர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பி.ஏ தமிழ் 3-ஆம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள் நேற்று (13.4.2023) காலை கல்வடங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், குளிக்க ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, ஒரு மாணவர் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரை மீட்க சக மாணவர்கள் உதவி செய்யும் போது, 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியுள் ளனர். இதனைப் பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், எடப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தேவூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீச்சல் தெரியாததால் இளம் பிள்ளை யைச் சேர்ந்த மணிகண்டன் (20), கன்னந்தேரியைச் சேர்ந்த மணிகண்டன் (20), எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20) மற்றும் எடடிகுட்டமேட்டை சேர்ந்த பாண்டியராஜன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரி ழந்தது தெரிய வந்தது. நீரில் மூழ்கிய 4 மாணவர்களை எடப்பாடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றின் பகுதியில் குவிந்தனர். வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சங்ககரி, தேவூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். காவிரி ஆற்றில் 4 கல்லூரி மாணவர்கள் உயி ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
காவிரி ஆற்றில் மூழ்கி மரணம் அடைந்த 4 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), முத்துசாமி,
த/பெ.செல்வம் (வயது 20), மணிகண்டன் (வயது 20) மற்றும் பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.