சென்னை, பிப்.27 ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், தேர்தல் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீராகப் பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு மாநிலத்தின் ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அமைதி யான சூழலும், வலுவான நிர்வாகக் கட்டமைப்பும் மிக அவசியம். அந்த வகையில், தமிழ்நாட்டின் சிறந்த நிர்வாகம் மற்றும் ஆட்சி யமைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக அவர் பாராட் டினார்.
அண்மையில் 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் தொடர்பான பிரமாண்டமான பன்னாட்டு கூட்டத்தில், தமிழ்நாட்டின் தேர்தல் மேலாண்மை குறித்துப் பெருமையாகப் பேசியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
“ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் தமிழ் நாட்டின் தேர்தல் நடை முறைகள் மற்றும் நிர்வாகத் திறனை முன்மாதிரியாக எடுத்துரைத் தோம்.”
தமிழ்நாட்டின் அமைதியான சூழல் தேர்தல் பணிகளுக்குப் பேருதவியாக உள்ளது.
அரசு இயந்திரத்தின் துல்லிய மான செயல்பாடுகள் ஜனநா யகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத் துகின்றன.
தமிழ்நாட்டின் தேர்தல் முறை பன்னாட்டு அளவில் கவனிக் கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
