பிஜேபியின் தார்மிக ஒழுக்கம்?

2 Min Read

கருநாடக மேனாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி,  அரசு வேலைக்காக வரும் இளம் பெண்களிடம் – உறவுக்கு இணங்கினால் வேலைக்கான ஆணையைப் பிடி – என்று கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இதில் பட்டதாரிப் பெண் ஒருவரை மிரட்டி நெருக்கமாக இருக்கும் காட்சிப் பதிவு வெளியானதை அடுத்து, காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், இவர் கடந்த ஆண்டு பதவி விலகினார்.  ஆனால், பாஜக மேலிடம் இவருக்கு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா அமைச்சர வையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கி ஹோலி, இவர் அரசு வேலை கேட்டு வந்த பல இளம்பெண்களை பாலியல் ரீதியாக சீரழித் துள்ளார். இந்த நிலையில், பெல்காமைச்சேர்ந்த பட்ட தாரி இளம்பெண் அரசு வேலைக்காக விண்ணப் பித்தார். 

இவரை அழைத்துக் கொண்டு தலைநகர் டில்லி சென்று தனி அறையில் வைத்து, பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அந்தப்பெண் பாலியல் காட்சிப் பதிவை அவரது அலைபேசியில்  இருந்து எடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்துள்ளார்.  

அந்தக் காட்சிப் பதிவில் அவர் கன்னடர்கள் எல்லாம் ஆண்மையற்றவர்கள், பெல்காம் (கருநாடகா வில் உள்ள மராட்டியர்கள்  அதிகம் வாழும்பகுதி) மக்கள் தான் ஆண்மையுள்ள வர்கள் என்றும்,  எடியூரப்பா ஒரு பணப்பேய்! எப்போதும் பணம் பணம் என்று அலைவார் என்றும் பேசியிருந்தது – பதிவாகி உள்ளது, மேலும் அந்த இளம்பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்த  போது இந்த அறை “வாய்ஸ் புரூப் ரூம்” – ஆகவே இங்கே வெடி வெடித்தால் கூட சத்தம் வெளியே கேட்காது என்று அவர் பேசுவதும் பதிவாகி உள்ளது.. 

இந்த நிலையில் அண்மையில் வெளியான கருநாடக மாநில பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் பாலியல் காட்சிப் பதிவில் சிக்கிய ரமேஷ் ஜர்கி ஹோலிக்கு மீண்டும் பெலகாவி ரூரல் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை  வாய்ப்பளித்துள்ளது.  இந்தப் பட்டியலை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜேபியினரின் தார்மிக ஒழுக்கம் எத்தகைய தரத்தில் உள்ளது என்பதற்கு எத்தனையோ  எடுத்துக்காட்டுகள் உண்டு – இதுவும் ஒரு தகவல்.

இதே கருநாடக சட்டமன்றத்தில் பேரவை நடந்து கொண்டிருந்தபோதே பிஜேபி சட்டமன்ற உறுப் பினர்கள் கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த செய்தி கேட்டு, ஊரே சிரித்தது.

தன்னிடம் வேலை கேட்டு வந்த பெண்ணை சீரழித்த உ.பி. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கதை சிரிப்பாய் சிரித்ததுண்டு.

காஷ்மீரில் கத்துவா என்ற இடத்தில் ஒரு சிறுமியைக் கோயிலுக்குள் வைத்து, பிஜேபி உள்பட (அர்ச்சகரும் இதில் உண்டு) கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்ய வில்லையா?

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் விசாரித்தபோது, குற்ற வாளிகள் சொன்னது என்ன தெரியுமா? ‘நீங்களும் பிராமணர் நாங்களும் பிராமணர்  – எனவே  இந்த வழக்கைக் கை விடுங்கள்’ என்று சொல்லவில்லையா? – கேட்டால் இதுதான் ராமராஜ்யம், இந்து ராஜ்யம் என்பார்கள் – வெட்கக் கேடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *