சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்!
நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு அதுதான் அடையாளம்!
தஞ்சாவூர், பிப்.22 சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்! நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு அதுதான் அடையாளம்! என்றார் தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர்
நேற்று (21.2.2026) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை
இந்தியா முழுவதும் சட்டமாக்க வேண்டும்
சுயமரியாதைத் திருமணச் சட்டம் இந்திய அளவில் சட்டமாக வரவேண்டும். ஏனென்றால், இப்போது இரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட திருத்தம்தான் நடைமுறையில் இருக்கிறது.
ஒன்று, தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று கொண்டு வந்த சட்டம்.
இரண்டாவது, புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சியின்போது இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சொந்த ஜாதியா, சொந்த மதமா? என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், தங்களுடைய அனுபவத்தில், தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, வயது வந்தவர்களுக்கு முழு உரிமை உண்டு. அனைவரும் அந்த உரிமையைப் பெறுவதற்கு அடிப்படை மனித உரிமைதான்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
கே.என். பாஷா தலைமையில் குழு!
பெண்களுக்குரிய மனித உரிமையை மறுக்கக் கூடாது. அதேநேரத்தில், ஜாதி வெறியினால் கூலிப்படைகளைக் கொண்டு ஆணவக் கொலைகள் நடத்தப்படுகின்றன, கூலிப்படையினரால். அதைத் தடுக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரிகள் பழனிகுமார், ராமநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருப்பது பாராட்டத்தக்கதாகும். அதன்மூலமாக விடியல் ஏற்படவேண்டும் என்பதுதான் முக்கியம்.
18 வயதுள்ளவர்கள் வாக்களிக்கச் சுதந்திரம் உள்ளதோ, அதுபோலத்தான், 21, 18 மண வயது என்று இருக்கின்ற சட்டத்தை முழுமையாக அமலாக்கவேண்டும். அதற்குக் குறுக்குச்சால் ஓட்டுவது கூடாது. கூலிப்படைகள் மூலமாக அச்சுறுத்தலுக்கு வெறும் நீதிமன்றத் தண்டனைகள் மட்டும் போதாது. ஒரு பக்கம் தீவிரப் பிரச்சாரம்; இன்னொரு பக்கம் சட்ட நடவடிக்கை வரவேண்டும் என்பதற்காக, ஆணையம் அமைத்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரை இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, பாராட்டியிருக்கின்றோம்.
கலைஞர் ஆட்சியின்போது
இராஜமன்னார் தலைமையில் குழு!
செய்தியாளர்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு மகளிர் எப்படி பணியாற்றவேண்டும்?
தமிழர் தலைவர்: நிச்சயமாக, மகளிர் ஒவ்வொருவரும் பணியாற்றவேண்டும். இம்மாநாட்டில், மூன்று புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றோம். ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ ‘‘பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?’’, ‘‘அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசிக்) கடிதம்.’’
அண்ணா அவர்கள் எழுதிய கடைசி கடிதத்தை ‘உயில்’ போன்று எழுதினார். கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், உடனடியாக இராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து அதனைச் செய்தார்.
அதற்கடுத்தபடியாக, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, அந்தக் குழு அறிக்கை கொடுத்தது. அதனைச் சட்டமன்றத்திலும் நிறைவேற்றியிருக்கிறார்.
எனவே, இது தமிழ்நாட்டிற்கு மட்டும் பயன்படக் கூடியதல்ல. அகில இந்தியா முழுமைக்கும் பயன்படக் கூடியதாகும். இது ஒரு புத்தொளியைப் பாய்ச்சி இருக்கிறது. இதற்குரிய கருத்தோட்டத்தை இந்திய அளவில் செய்யவேண்டும்.
நாம் பிரிவினைவாதிகள் அல்ல; நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு அது இன்னொரு அடையாளம்.
செய்தியாளர்: இனப்படுகொலை என்பது காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி வைத்திருந்தபோதுதான் அதிகமாக நடைபெற்றது என்று விஜயகாந்த் முன்பு பேசிய ரீல்ஸ் காட்சிகள், தற்போது வைரலாகி இருக்கிறது. ஆனால், இப்போது தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டு இருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எது, எங்கே இருந்தால், சரியாக இருக்கும் என்று தெளிவான முடிவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா எடுத்திருக்கிறார். இந்த முடிவை 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்கவேண்டும்; 10 ஆண்டுகள் கழித்தாவது இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று தெளிவாகச் சொன்னார்கள்.
ஒரு காலகட்டத்தில், காங்கிரசில் உள்ளவர்களே தி.மு.க.வினரை விமர்சனம் செய்தார்கள். இதுபோன்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதனால், அந்தந்தக் காலகட்டங்களில் நடந்ததைப்பற்றி இப்போது சொல்லவேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக, 2ஜி என்று பல பேர் பேசுகிறார்கள். ஆனால், ஆ. இராசா அவர்கள், 2ஜி வழக்கில் வெற்றி பெற்று வந்துவிட்டார்.
ஆகவேதான், தேர்தல் நேரம் போன்ற காலட்டத்தில் சர்ச்சைகள் இருக்கும். இப்போது தமிழ்நாட்டில், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்.
‘‘அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் கிடையாது; நிரந்தர நண்பர்களும் கிடையாது!’’
ஆகவே, தமிழ்நாட்டில், பா.ஜ.க. கூட்டணி வந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே, நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும்; அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
கலைஞர் தலைமையில்தானே, விஜயகாந்த் – பிரேமலதா திருமணம் நடந்தது. விஜயகாந்த் தானே விழா நடத்தி பெரிய வெள்ளிப் பேனாவைக் கொடுத்தார் கலைஞருக்கு! தங்கப் பேனாவைப் பரிசளித்தார்.
தேர்தலில் நிற்பவர்கள் ஒன்றைச் சொல்லுவார்கள், ‘‘அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் கிடையாது; நிரந்தர நண்பர்களும் கிடையாது’’ என்று.
தே.மு.தி.க. இப்போது தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. இந்தத் தேர்தல்தான் முக்கியமே தவிர, இப்போது முடிவெடுப்பதைத்தான் பாராட்டவேண்டுமே தவிர, இதற்கு முன் அவர் என்ன சொன்னார்? இவர் என்ன சொன்னார்? என்று பார்ப்பது முக்கியமல்ல.
மூழ்குகின்ற கப்பலை விட்டு, எல்லோரும் குதிக்கிறார்கள். பலமான கப்பல் எதுவோ,
அதில் ஏறுகிறார்கள்!
செய்தியாளர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் 5 ஆண்டு நிறைவின்போது, ஆளுங்கட்சிக் கூட்டணியில் நிறைய கட்சிகள் கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கின்றதே, வருகின்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றி எப்படி அமையும்?
தமிழர் தலைவர்: எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்குமா? என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்! அப்படியில்லையென்றால், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியையே எதிர்க்கட்சி ஆக்கினாலும் ஆக்குவார்கள், இவர்கள் போகின்ற வேகத்தைப் பார்த்தால்.
எங்கள் கூட்டணியில் வந்தால், ஆட்சியில் பங்கு கொடுப்போம், பதவியில் பங்கீட்டுக் கொடுப்போம் என்று சொன்னவருக்கு பெரிய ஏமாற்றம்.
ஏனென்றால், பா.ஜ.க. கூட்டணிக்கு யாரும் போகவில்லை.
மூழ்குகின்ற கப்பலை விட்டு, எல்லோரும் குதிக்கிறார்கள். பலமான கப்பல் எதுவோ, அதில் ஏறுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.