கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.2.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* “பழம் நழுவி பாலில்..” – திமுக-வுடன் கைகோர்த்த தேமுதிக. எந்தப் பக்கம் செல்லப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக நேற்று இணைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (19.2.2026) காலை சந்தித்த பிரேமலதா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

* பாஜகவிற்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்: மகாராட்டிராவில் பிற்படுத் தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க.! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்ய துடிக்கிறார்கள். இத்தகைய வெறுப்பு இன்ஜின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம். ‘‘தமிழ்நாடா பாஜகவா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பன்னாட்டு பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு, இங்கிலாந்து மன்னரின் தம்பி கைது: பிரிட்டன் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.

* ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து பிரதமர் மோடி கூறிய வார்த்தையால் சர்ச்சை; மேற்கு வங்க கலாச்சாரம் குறித்து மோடி அறியாமையில் உள்ளார் என மம்தா காட்டம்.

தி இந்து:

* குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மே 5இல் விசாரணை. கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இது தொடர்பான வழக்குகள் வரும் மே மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது. அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* நாடு முழுவதும் மேலும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆயத்தப் பணிகளை விரைவில் முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* மாநிலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்கள் கூட்டு நுழைவுத்தேர்வு (ஜேஇஇ) முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

தி டெலிகிராப்:

* மம்தா அரசு மதிய உணவில் கூடுதல் முட்டைகளை வழங்க உத்தரவிட்டது, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 81,19,415 மாணவர்களுக்கு 12 நாட் களுக்கு ஒரு முழு முட்டை அல்லது ஒரு பருவகால பழம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*அசைவ உணவுக்கு பாஜக தடையா? வங்காளத்திற்கு மீன் மற்றும் இறைச்சி கிடைக்கும்’: முதலமைச்சர் மம்தா பேச்சு.பீகாரில் மீன் மற்றும் இறைச்சியை வெளிப்படையாக விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில், மேற்குவங்க பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா வங்காளத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி உணவை உட் கொள்ள சுதந்திரமாக உள்ளனர் என்றும், கட்சி மாட்டிறைச்சியை வெளிப்படையாக விற்பனை செய்வதை மட்டுமே எதிர்க்கிறது என்றும் புலம்பல்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *