தஞ்சை இருபெரும் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 20- சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 15.02.2026 காலை 11 மணியளவில் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா. தே வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தொழிலாளர் அணித் தோழர் மணிகண்டன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாவட்டச் செயலாளர் நங்கைநல்லூர் தமிழ் இனியன் அனைவரையும் வர வேற்றார். குறிப்பாக நமது பெரியார் குடும்பத்தைச்சேர்ந்த நிவேதன் சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத் தோழர்களுடன் இணைந்து பணியாற்ற முன் வந்து கலந்துரையாடல் கூட்டத் தில் கலந்து கொண்டார். அவரை பெரு மகிழ்ச்சியோடு வரவேற்று, கூட்டத்தின் நோக்க உரையாற்றினார்.  தலைமை வகித்த வேலூர் பாண்டு தஞ்சை மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தீர்மானங்கள்

தஞ்சையில் வரும் 21.02.2026 அன்று நடைபெற இருக்கும் மாநாடுகளுக்கு அனைவரும் சென்று கலந்து கொள்வது என்றும் உறுப்பினர்கள் கூடுதலாக ஒருவரையேனும் அழைத்துச் செல்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மும்பையில் நடந்த மாநாட்டினை அடுத்து வரும் 28.02.2026 அன்று கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பெங்களூருவில் நடைபெற விருக்கிறது.

அந்த மாநாட்டில்  வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டப்படுகிறார்கள்.

பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வேலூர் பாண்டு மாவட்டத் தலைவர், நீலாங்கரை இரா.தே வீரபத்திரன், நங்கைநல்லூர் தமிழ் இனியன் மாவட்டச் செயலாளர், கலைச்செல்வன் மாவட்டத் துணைத் தலைவர், பி.சி.ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர்,  மணிகண்டன் தொழிலாளர் அணி, ஜெ.குமார் பகுத்தறிவாளர்கள் கழகம், நிவேதன் கழகத் தோழர் (புதுவரவு)  ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *