தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் நூலினை வெளியிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் புலவர் முத்து.வாவாசி குடும்பத்தினர் உள்ளனர்.