அறிவியல் துணுக்குகள்

1 Min Read

அமெரிக்காவில் ஏ.அய். பயன்பாட்டால் ஆண்டுக்கு 8.96 லட்சம் டன் கார்பன் உமிழ்வு நிகழ வாய்ப்புள்ளது. இது 3 லட்சம் வீடுகளின் மின் நுகர்வால் ஏற்படும் உமிழ்வுக்குச் சமம். ஏ.அய். கட்டமைப்பு சூழலுக்கு கேடில்லாத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையே இது வலியுறுத்துவதாக மசாசூசெட்ஸ் பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது.

‘செரின்’ என்ற சத்து, மயிர்க்கால் செல்களை, காயம் ஆற்றும் செல்களாக மாற்றுவதாக, சால்க் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. செரின் சத்துள்ள உணவுகள், செரினை பயன்படுத்தும் புதிய சிகிச்சைகள் வாயிலாக காயங்களை மிக வேகமாக குணப்படுத்த முடியும்.

நெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் பல்கலை ஆய்வில், எஸ்.ஜி.எல்.டி., 2 வகை மருந்துகள் சிறுநீரகத்தின் கட்டமைப்பையும் ஆற்றலையும் சிதையாமல் காப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மனிதர்களின் சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

செடிகள் ஒன்றை யொன்று தொடும்போது, கடும் ஒளியைத் தாங்கும் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்கின்றன. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலையின் இந்த ஆய்வு, தாவரங்களுக்கு இடையே இதுவரை அறியப்படாத ஒரு ரகசிய தகவல் தொடர்பு முறை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள், மரத்திலுள்ள ‘லிக்னின்’ மூலம் புதிய வெப்பக் காகிதத்தை உருவாக்கியுள்ளனர். நச்சுத்தன்மையுள்ள பிஸ்பெனால் ரசாயனங்களைத் தவிர்த்துள்ள இக்காகிதம், தெளிவான அச்சுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான மாற்றாக அமையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *