ரூ.24.30 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 15– மதுரை அடுத்த கீழடியில் ரூ.24.30 கோடியில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.2.2026 அன்று திறந்து வைத்தார்.

மேலும் ஈரோட்டில் நொய்யல், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் வைகை நதிக் கரையில் சங்ககால நகர நாகரிகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க கீழடியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிக் கூடங்களுடன் ரூ.24.30 கோடி செலவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் 13.2.2026 அன்று திறந்து வைத்தார்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் ரூ.2.75 கோடியில் மேற்கொள்ளப் பட்ட உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டட முகப்பு விளக்குகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லி பாளையத்தில் ரூ.33.19 கோடியில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் ரூ.34.55 கோடியில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர, சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கில், 2023-20–24ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.41 கோடியில் அருங்காட்சியகத் துறையால் அமைக்கப்படவுள்ள சோழர் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, சுற்றுலாத் துறை செயலர் மணிவாசன், நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், அருங்காட்சியகத் துறை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை, பிப். 15- மதுரை அடுத்த கீழடியில் ரூ.24.30 கோடியில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.2.2026 அன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு குறித்து சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை கீழடிக்கு பெற்றோர் அழைத்து வாருங்கள். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழ் எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் – நாவாய், ஈரோடு- நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு குறித்து சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை கீழடிக்கு பெற்றோர் அழைத்து வாருங்கள். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழ் எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் – நாவாய், ஈரோடு- நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *