முதல் ‘பார்வை மாற்றுத்திறனாளி’ நீதிபதி 24 வயதில் சாதித்துக் காட்டிய பெண்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.14– அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இருப்பினும், சில பதவிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிப் பெறுவது என்பது சவாலாக உள்ளது. குறிப்பாக நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த சவால்களுக்கு நடுவில் ஒருவர் சாதிப்பது என்பது சமூகத்தின் வளர்ச்சியாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான உத்வேகமாகவும் உள்ளது.

அந்த வகையில், கேரளாவில் நடைபெற்ற சிவில் நீதிபதிகளுக்கான நீதித்துறை சேவைகள் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம்பிடித்து சாதித்துக்காட்டியுள்ளார் 24 வயதான தன்யா நாதன்.

கேரளாவின் கன்னூரில் வசித்து வருபவர் தன்யா நாதன். ஒளி உணர்தல் குறைப்பாடுடன் பிறந்தவர் இவர். சட்டத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், பள்ளிக் கல்வியை முடித்து கன்னூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி சட்டப்படிப்பை முடித்தவர். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி முறையில் படித்த இவர், பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்வானார். அதனைத்தொடர்ந்து, கன்னூர் தளிபரம்பாவில் உள்ள வழக்குரைஞரிடம் ஜூனியர் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.

கேரளா சிவில் நீதிபதி தேர்வு

கேரளாவில் நீதித்துறை சேவைகளுக்கான தேர்வு ஜூனியர் டிவிஷன் சிவில் நீதிபதிகளைத் தேர்வு செய்ய நடைபெற்றது. இதனின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் கன்னூரை சேர்ந்த தன்யா மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான பிரிவில் முதல் மதிப்பெண்கள் பெற்றார். பெருமூளை வாதம் கொண்ட ஜாய்சன் சாஜன் என்பவர் இரண்டாம் இடம்பெற்றார்.

நீதிமன்ற உத்தரவு

2025ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியவர்கள் அமர்வு நீதித்துறையில் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய உத்தரவை வழங்கியது.

நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தகுதியற்றவர்கள் என கூற முடியாது. அவர்களுக்கும் தேர்வில் பங்கேற்க உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் வழியிலேயே தற்போது தன்யாவிற்கு நீதிபதியாகுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

முதல் ‘பார்வை மாற்றுத்திறனாளி’ நீதிபதி

கேரளா நீதித்துறை தகவல்களின் படி, இதுவரை பார்வை மாற்றுத் திறனாளிகள் நீதிபதியாக பதவி வகித்தது இல்லை என கூறப்படுகிறது. அந்த வகையில், கேரளா வரலாற்றில் முதன்முறையாக 24 வயது பார்வை மாற்றுத்திறனாளி தன்யா நாதன் நீதிபதியாக தேர்வாக உள்ளார். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படவுள்ளது.

தொடரும் சவால்கள்

இவரின் இந்த பாதை சுலபமாக இல்லை. வழக்குகளுக்கான குறிப்புகள், சட்டப்புத்தகங்களை பிரெய்லி முறையிலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்கிரீன் ரீடிங் (Screen Reading) சாப்ட்வேர் உதவியுடனும் படித்து வந்தார். இருப்பினும், பழைய வழக்குகளுக்கான பதிவுகள், ஆவணங்களை படிப்பில் சவால்களை இருப்பதாக கூறுகிறார். இந்த சவால்களையும் கடந்துவருவேன் என்பதில் நான் தன்னமிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வகையில் நீதிமன்றத்தில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *