ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (4) மதிக்கு ஒவ்வா மகா சிவராத்திரி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா.

இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு – பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம்.  அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் படுத்து விட்டது. அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். புலி முழுவதும் வில்வ இலைகளால் மறைக்கப்பட்டது. அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).

அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து விழுந்தனவாம்.

கலையில் வில்வ இலைகள் விலகியபோது புலி சிவலிங்கமாக மாறியிருந்தது. சிவபெருமான் தான் புலியாக வந்து வேடனைச் சோதித்தார் என்கிறது புராணம்.

எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், இயற்கை சூழலால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி – பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.

அடுத்த கதை – ஒரு பாhப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்த தைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகா சிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

இந்தப் பாழும் அர்த்தமற்ற – பொய்யான – ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். எனவே அறிவைக் கெடுக்கும் இந்த ஆன்மிகக் கருத்துகள் நம்பிக்கைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் விழிப்போடு ஆன்மிக ஈர்ப்பில் அகப்படாமல், அறிவு வழி வாழ வேண்டும்.

புலியின் மீது வில்வ இலைகளைப் போட்டால் அது எப்படிச் சிவலிங்கமாக மாறும்? புலி இரவு முழுக்க மரத்தடியிலே படுத்திருக்காது. ஆக, நடைமுறைக்கும் உண்மைக்கும் ஒவ்வாத இந்த மகா சிவராத்திரி கதை அறிவுக்கு உகந்ததா? அறிவுக்கு எதிரானதா? சிந்தித்துப் பாருங்கள்!

கொலை செய்த பார்ப்பான் சொர்க்கத்திற்கு போனான் என்பது கேலிக் கூத்தாக இல்லையா? பலகாரம் திருடியவனை கொலை செய்வதுதான் நேர்மையா? நீதியா? அதைச் செய்த பார்ப்பானுக்கு தண்டனை இல்லையா? சிவராத்திரி அன்று கொலை செய்யப்பட்டால் கொலை செய்யப்பட்டவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்று ஆன்மிகக் கருத்து அறிவுக்கு உகந்ததா? பைத்தியக்கார உளரல், பைத்தியக்கார செயல்களையெல்லாம் பக்தியின் பேரால் மகிமை ஏற்றுவது மடமையல்லவா?

சிறப்புக் கட்டுரை

மகாமகம்

“மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு ‘திருவிழா’ கொண்டாடப்படுகிறது. அதுபற்றி எல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம், ஸ்தலம், மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்களாய், மடையர்களாய் ஆக்கப்படுகின்றார்கள்? என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

குளம் என்பது ஒரு சாதாரணத் தெப்பக்குளம். தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் மழை பெய்வதனால் ஏற்படும் வெள்ளமெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்து வந்து தேக்கி இருப்பதுதான்.

மேலும், அந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் (மாமாங்கக் குளத்தில்) வடக்கில் ஏழு தீர்த்தங்களும், கிழக்கில் நான்கு தீர்த்தங்களும், நடுமத்தியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளதாகவும், ஆக இந்த மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அந்தப் புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் எவ்வளவு நகைக்கத் தகுந்த விஷயம்? இதை எழுதியவன் எவ்வளவு அயோக்கியன்? அல்லது எவ்வளவு முட்டாள்? என்பது அல்ல நமது கேள்வி! இதைப் படித்துப் பார்த்து அதன்படி நம்பி நம் மக்கள் நடப்பார்கள் என்று நம் மக்களை எவ்வளவு முட்டாள்களாகவும், அடி வண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி!” என்று தந்தை பெரியார் கேட்கிறார்.

மேலும், கும்பகோணம் ஸ்தல புராணத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னிகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் கொடிய பாவங்களைச் செய்து விட்டு, தங்களைப் பாவங்களிலிருந்து மீட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் பாவங்களைச் சுமப்பதை எப்படி போக்கிக் கொள்வது?” என்றதும், சிவன் “கும்பகோணத்திலே தென்கிழக்கில் ஒரு தீர்த்தம் உண்டு. அங்கே பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் மகாமக நாளன்று குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்றதும், “கும்பகோணம் எங்கே உள்ளது?” என்று கன்னியர்கள் கேட்டார்களாம்! அதற்குச் சிவன், “நீங்கள் எல்லோரும் காசிக்குப் போங்கள்; அங்கே வந்து நான் விக்னேஸ்வரன் எனும் பெயரில் அழைத்துப் போகின்றேன்” என்று சொல்லி காசியில் இருந்து கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று குளத்தில் அவர்களை குளிக்கச் செய்து, பிறகு சிவனும் அந்தக் கன்னியர்களும் அங்கேயே கோவில் கொண்டு விட்டார்கள்.

அந்தக் குளத்தில் குளிப்பவர்களுக்கு சர்வ பாவமும் தொலைந்து புண்ணியம் உண்டாகி, சர்வ மங்களமும் உண்டாகும் என அப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குளத்தில் எப்படிக் குளிப்பது? அதற்காகப் பார்ப்பனர்களுக்கு எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது? எந்தெந்த இடத்தில் எந்தெந்த சாமியை எப்படியெப்படி வணங்குவது? என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதையை ஆதாரமாக வைத்து, இந்த மகாமக உற்சவத்திற்கு எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், விளம்பரங்கள், பணச் செலவுகள், கஷ்டங்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்து, பாவமுள்ள மனிதர்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள நதிகளில் ஸ்நானம் செய்தால் நதிகளுக்குப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் அறிவோ, உண்மையோ உள்ளதா? மேலும் அந்தப் பாவத்தைத் தொலைக்க நதிகள் மகாமகத் தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதனால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என யோசியுங்கள்.

இத்தனைப் பாவங்களையும் தீர்த்துத் தன்னிடம் பெற்றுக் கொண்ட மகாமகக் குளம் எந்த உருவில், எங்குப் போய் தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதை யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா?” என்று சிந்தித்துப் பாருங்கள்!” என்று தந்தை பெரியார் கேட்கும் கேள்வி எவ்வளவு அறிவுடையது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

சிறப்புக் கட்டுரை

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒருசமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்:

“உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக் கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக் கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தர வேண்டும்” என்று வேண்டினார்கள். அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெறும் முயற்சியில் அவளோடு கலவி செய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால், குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகமே தாங்காது; அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும்’ என்று தேவர்கள் கருதி, சிவனிடம் சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு சிவன், “நீங்கள் சொல்லுவதுபோல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என் செய்வது?” என்றதும், உடனே தேவர்கள் தங்களை கைகளை ஏந்தி அதில் விடும்படி கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தை விட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்ப நோய் வந்து விட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்ப நோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு, ‘காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்’ என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்துப் பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால், ‘ஸ்கந்தன்’ என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதைக் கண்டீர்களா!

இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்தை உலகலேயே கேட்க முடியுமா? உடலுறவு என்பது 10 நிமிடங்களில் முடியக் கூடியது. அப்படி இருக்க 1000 ஆண்டுகள் நீடித்தது என்பது அறிவுக்கு ஏற்றதா?

உடலுறவு முடிந்து 15 நாள் கழித்தே கருதரிப்பது தெரியும். அப்படியிருக்க, கலவி நடக்கும் போதே கருத்தரிக்கவில்லையென்று கவலைப்பட்டது அடி முட்டாள் தனம் அல்லவா?

விந்தே வெளிப்படாமல் ஆயிரம் வருடம் உடல் புணர்ச்சி செய்து, அதன்பின்தான், தேவர்கள் கையேந்த தனது விந்தை அவர்கள் கையில் விட்டார் சிவன் என்கிறது ஆன்மிகம். விந்தே வெளியிடாமல் குழந்தை உருவாகவில்லை என்று கூறியது அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்றதா? தேவர்கள் தங்கள் கையில் வாங்கிய விந்தை குடித்தார்களாம். அதனால் தேவர்கள் கர்பமானார்களாம். ஆண்கள் ஒருவன் விந்தை வாயால் குடித்தால் கரு எப்படி உருவாகும்? குடித்த விந்து இரைப்பைக்குத் தான் போகும் – செரித்துவிடும். அது எப்படி கருவாகும்? உடற்கூறு உண்மை அறவே அற்ற இந்த ஆன்மிகக் கருத்துகள் அறிவைக் கொடுக்குமா? கெடுக்குமா? சிந்தித்துப் பாருங்கள்!

கங்கையில் ஓடிய சிவனின் விந்து ஆறாகப் பிரிந்து ஆறுமுகக் கடவுள் உருவானது என்பது அறிவுக்கு ஏற்றதா? விந்து தண்ணீரில் கலந்தால் குழந்தை எப்படி உருவாகும்? குழந்தை உருவாக ஆணின் விந்துவுடன் பெண்ணின் சினையணு சேர வேண்டும் அல்லவா! சினையணுவே சேராமல் குழந்தை பிறந்தது என்பது எவ்வளவு மோசமான உளறல்? இப்படிப்பட்ட ஆன்மிகம் அறிவைக் கொடுக்குமா? கெடுக்குமா?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

ஆறுமுகன் பிறப்பு அசிங்கமான அறிவுக்குப் பொருந்தாது என்றால், கிருஷ்ணன் பிறப்பு அதைவிட அபத்தம். மார்பில் இருந்த இரண்டு மயிர்களைப் பிடுங்கிக் கொடுக்க அந்த இரண்டு மயிர்களும் இரண்டு குழந்தையானதாம்! இதைவிட அவலமான, கேவலமான, அறிவுக்குப் பொருந்தாக் கருத்து உலகில் உண்டா? இப்படிக் கூறும் ஆன்மிகம் அறிவைக் கொடுக்குமா? சிந்தியுங்கள்.கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

ஆறுமுகன் பிறப்பு அசிங்கமான அறிவுக்குப் பொருந்தாது என்றால், கிருஷ்ணன் பிறப்பு அதைவிட அபத்தம். மார்பில் இருந்த இரண்டு மயிர்களைப் பிடுங்கிக் கொடுக்க அந்த இரண்டு மயிர்களும் இரண்டு குழந்தையானதாம்! இதைவிட அவலமான, கேவலமான, அறிவுக்குப் பொருந்தாக் கருத்து உலகில் உண்டா? இப்படிக் கூறும் ஆன்மிகம் அறிவைக் கொடுக்குமா? சிந்தியுங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *