சென்னை, ஏப். 17- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக் கையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று (16.4.2023) ஒரே நாளில் கரோனா பாதிப்பு 500அய் கடந்து பதிவாகி இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (16.4.2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று ஒரே நாளில் 514 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 255 பேர், பெண்கள் 259 பேர் அடங்குவர். இதேபோல, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 138 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு அடுத்தபடியாக கோவை 55 பேரும், கன்னியாகுமரி 50 பேரும், சேலத்தில் 31 பேரும், திருவள்ளூரில் 27 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதிப் பில் இருந்து இன்று 366 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 195ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு இல்லை. சென்னையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில்
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண் ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.
கேரளா, மராட்டியம், டில்லி, உத்தரப்பிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,35,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது.