திருப்பத்தூர், ஏப். 18- திருப்பத் தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம் 15.04.2023 அன்று நடை பெற்றது.
இக் கூட்டம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் வே. அன்பு வரவேற்பிலும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாநில மகளி ரணி பொருளாளர் எ. அகிலா, மண்டல இளைஞரணி செய லாளர் எ. சிற்றரசு, மாவட்ட ஆசிரியரணி தலைவர் கோ. திருப்பதி ஆகியோரது முன்னி லையிலும் நடைபெற்றது.
கலந்துரையாடலின் நோக் கம் குறித்து மாநில பகுத்தறி வாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன் அறிமுக உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் மற்றும் மாநில பகுத் தறிவாளர் கழக பொதுச் செய லாளர் வீ. மோகன் மற்றும் மாவட்ட தலைவர் கே. சி. எழி லரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இக் கலந்துரையாடல் கூட் டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தீர்மானங்கள்
1. மாதந்தோறும் கலந்துரை யாடல் கூட்டம் ஒன்றியம் தோறும் நடத்துவது.
2. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது.
3. நமது இயக்க ஏடுகளான பெரியார் பிஞ்சு, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட், திராவிடப் பொழில் ,விடுதலை ஆகிய ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது.
4. வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் விளை யாட்டு போட்டிகள் நடத்தி மாநில அளவில் பெரியார் கோப்பை விளையாட்டு விழா நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
5.தருமபுரி மண்டல மகளி ரணி செயலாளர் இந்திரா காந்தியின் தாயாரும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவண னின் மாமியாருமான சுப்பம் மாள் 29.3.2023 அன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு திருப் பத்தூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் ளுகிறது.
6. மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட் சுமி தமிழ் வளர்ச் சித் துறை சார்பாக மார்ச் 14 அன்று தமிழறிஞர் விருது மற்றும் அரசாணை வழங்கப் பட்டது. அவருக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பாராட்டுதல்களையும் வாழ்த் துக்களையும் இக்கூட்டம் தெரிவித்து கொள்கிறது.
என்ற 6 தீர்மானங்கள் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பங்கேற்றோர்
இக் கலந்துரையாடல் கூட் டத்தில் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், நகர தலை வர் காளிதாஸ், நகர அமைப் பாளர் அக்ரி அரவிந்த், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா. கனக ராஜ், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி, விடுதலை வாசகர் வட்ட மாவட்ட துணைத் தலைவர் வ.புரட்சி, சோலையார் பேட்டை ஒன்றிய தலைவர் இராஜேந்தி ரன், சோலை யார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண் டியன், சோலை யார்பேட்டை நகர தலைவர் க. மதியழகன், கந்திலி ஒன்றிய ப. க. அமைப் பாளர் லட்சுமணன், லக்கி நாயக்கன்பட்டி கிளை பொறுப்பாளர் மா. சரவணன், திருப்பத்தூர் நகர அமைப் பாளர் ச. பெரியார் செல்வம், முத்துச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
இறுதியாக மாவட்ட ஆசிரி யரணி செயலாளர் சு. குமர வேல் நன்றி தெரிவித்தார்.