குமரி மாவட்ட கழகம் சார்பாக வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டக் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி கழகக் கொடியினை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார் தாஸ் , தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், இரா.முகிலன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டக் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக் கொடியேற்று விழா
Leave a Comment