வாரிசுகளைப்பற்றி வாயைத் திறக்கலாமா பிஜேபி?

2 Min Read

வாரிசு அரசியல்பற்றி எல்லாம் பிஜேபி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வாயைத் திறப்பதுதான் ஆச்சரிய மானது!

“வைத்தியரே, முதலில் உங்கள் நோயைப் போக்கிக் கொள்ளுங்கள்!’ என்ற சொலவடை உண்டு.

கருநாடக மாநிலத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதுமானது.

1.தற்போது முதலமைச்சராக உள்ள எஸ்.ஆர் பொம்மையின் தந்தை கருநாடகா மேனாள் முதலமைச்சர், மேலும் அவரது குடும்பமே அரசியலில் நீண்ட ஆண்டுகளாக உள்ளது 

2. எடியூரப்பாவின் மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அவரது மற்றொரு மகன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்

3.நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூரியா வின் மாமா  ரவி சுப்ரமணிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது

 4. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பசவராஜின் மகன்   ஜோதிகணேஷ் மற்றும் அவரது  குடும்பத்திற்கு தேர்தலில்போட்டியிட இடம் கொடுக்கப்பட்டுள்ளது 

  5. பாலியல் விவகாரத்தில் சிக்கி பதவி இழந்த பாஜக மேனாள் அமைச்சர் ஜார்கி ஹோலி மற்றும் அவரது சகோதரர்களுக்கும்  சீட்டு வழங்கப் பட்டுள்ளது. 

6. பிரபல பாஜக பிரமுகரும் பல்வேறு மோசடி புகார்களில்  இடம் பெற்றுள்ளவருமான உமேஷ் கட்டி குடும்பத்தவர்களான உமேஷ் கட்டியின் மகன் மற்றும் சகோதரருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

7. இரண்டு ரெட்டி சகோதரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது 

8. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீனிவாஸ் பிரசாத் மகன்  ஹர்ஷ்வர்தனுக்கு வாய்ப்பு. 

9. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அன்னா சாகேப் பின் மனைவி சசிகலா ஜொல்லேவிற்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது

10. மேனாள் அமைச்சரின் மகன் பிரீதம் நாகப்பாவுக்கு வாய்ப்பு

11. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உமேஷ் ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவுக்கு வாய்ப்பு

12. மேனாள் அமைச்சரின் மகன் தத்தாத்ரேயா பாட்டீலுக்கு வாய்ப்பு 

13. சுரேஷ் பாபு மற்றும் சிறீராமுலு, மருமகன் மற்றும் மாமா ஆகியோருக்கும் வாய்ப்பு 

14. மேனாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் அரவிந்த் பெல் லாடுக்கு  வாய்ப்பு

15. சட்டமேலவை உறுப்பினர் பாட்டீலின்  மகன் சந்திரகாந்த் பாட்டீலுக்கு வாய்ப்பு

16. மேனாள் அமைச்சரின் மகன் சப்தகிரி கவுடாவுக்கு வாய்ப்பு 

17. மேனாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகன் அம்ருத் தேசாய்க்கு வாய்ப்பு

18. மேனாள் அமைச்சர் ஆனந்த் சிங்கின் மகன் சித்தார்த் சிங்குக்கு வாய்ப்பு

19. மேனாள் அமைச்சரின் மகள் பூர்ணிமா சிறீநிவாசுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கருநாடக தேர்தலில் போட்டியிடும் பாஜக வாரிசுப் பட்டியல் இன்னும் நீளும், மேலும் பலர் உண்டு. உள்ளூர் பாஜக பிரமுகர்கள், நகர்மன்ற மாநகராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சரின் மகன்கள், உறவினர்கள் என கருநாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வாரிசுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

மேலும் பாஜகவில் வாரிசுகளுக்கு இடமில்லை. அப்பன், மாமன் பெயர் சொல்லி வந்தால் வெளியே விரட்டி விடுவோம் என்று கூறிய அண்ணாமலைதான் இந்தப் பட்டியலை பெங்களுருவில் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் அண்ணாமலைகள் பதில் கூறட்டும். தொலைக்காட்சிகளில் அரட்டையடிக்கும் – பா.ஜ.க. அதிகப்பிரசங்கிகள் விடையளிக்கட்டும். ஓணான் ஒட்டகத்தைப் பழித்த கதைதான்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *