ஏற்கெனவே முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் கட்டடம் கட்டுவது சிக்கனமா னது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டட ‘3டி பிரின்டர்’கள், இரும்பு, மணல், சிமெண்ட் போன்ற பல கட்டுமானப் பொருட்கள் குறைவாகப் பயன்படுத்தியே கட்டடங்களை கட்டுகின்றன. இப்போது அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் இன்னொரு படி மேலே சென்றுள்ளனர்.
அவர்கள் உருவாக்கியுள்ள புதிய முப்பரிமாண அச்சு முறைப்படி, சுவர் களை விரும்பிய வடிவில் கட்ட முடியும். அதுமட்டுமல்ல, சுவரின் எடை 72 சத வீதம் வரை குறைவாக இருக்கும். அதே நேரம், அந்த சுவர்களின் உறுதித்தன்மை, வழக்கமாக சிமென்டால் இழைத்துக் கட்டப்படும் சுவர்களுக்கு இணையாக இருப்பதாக மிச்சிகன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சுவர்களுக்கு எங்கே எடை அதிகம், எங்கே குறைவு என்பதை ஒரு கணினி மாதிரியில் சோதித்து, அந்தக் குறிப்புகளை கட்டடம் கட்டும் முப்பரிமாண அச்சியந் திரத்திடம் கொடுத்தால் போதும். வடிவ அழகோடு, எடை குறைவாகவும், உறுதி குறையாமலும் சுவர்களை கட்டித் தருகிறது.
அப்படியென்றால், கட்டுமான செல வில் 72 சதவீதம் குறைந்துவிடுமா? இந்த அச்சியந்திரம் எப்போ இந்தியாவுக்கு வரும்?