கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.1.2026

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜகவில் ஊழல் செய்தவர்கள் ‘வாஷிங் மெஷினில்’ தூய்மைபடுத்தப்படுகிறார்களா?, கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம், மு.க.ஸ்டாலின் காட்டம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் தொடர் போராட்டம்.

* அஜித் பவார் மறைவை தொடர்ந்து மகாராட்டிரா துணை முதலமைச்சராக சுனேத்ரா பவார் இன்று பதவி ஏற்பு: கலால், விளையாட்டுத்துறை ஒதுக்கப்படுகிறது. பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க முயற்சி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்கள் டிசம்பர் 2024இல் பதவி விலகியதாலும், அதன் துணைத் தலைவர் ஏப்ரல் 2025இல் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததாலும், செயலிழந்து போன காலிப்பணியிடங்கள் குறித்து நீதிமன்றம் கேள்வி. ‘எங்களை ஏன் கடுமையாக நடந்து கொள்ளச் சொல்கிறீர்கள்?’: என ஒன்றிய அரசை நோக்கி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்.

* டபுள் என்ஜின் சர்க்கார் லட்சணம்:ராஜஸ்தான் அரசுப் பள்ளி அறைகளில் 56% பாதுகாப்பற்றவையாக அல்லது இடிந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளன: ராஜஸ்தான் ஜாலாவாரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கூரை இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்தும், எட்டு பேர் காயமடைந்தும் சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது

* காந்தியாரின் 78ஆவது நினைவு நாளில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி சியாம பிரசாத் முகர்ஜிக்கு நேருவும் படேலும் எழுதிய கடிதங்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்  பகிர்ந்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உற்பத்தித் துறையில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகளில் சுமார் 60% ஏழு மாநிலங்களில் இருப்பதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டுகிறது.

* கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் புதிய யுஜிசி விதிகள் அவசியமானவை, ஏனெனில் பழைய விதிகள் பலனளிக்கவில்லை. அவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் வாதங்களை உண்மைகள் பொய்யாக்குகின்றன என்கிறார் யு.ஜி.சி. முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட்

தி இந்து:

* “எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாரிசு அரசியல் முதல் ஊழல் புகார் வரை – எதிர்கட்சிகளுக்கு பதிலடி!

* வரலாற்று அநீதிக்குத் தீர்வு காணும் அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின் கட்டளையிலிருந்து யுஜிசி சமத்துவ விதிகள் உருவாகின்றன; 2026-ஆம் ஆண்டு விதிமுறைகள் தலைகீழ் பாகுபாட்டை ஆதரிக்கின்றன என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளதற்கு பதில்.

* 100 நாள் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் கொலை செய்யும் முறை வந்து விட்டதா? கார்கே கேள்வி. பொருளாதார ஆய்வறிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் கார்கே எக்ஸ் தளத்தில் பதிவு.

* யுஜிசியின் சமத்துவ விதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கலாம், ஆனால் அவை அத்தியாவசியமானவை; ஒருவரைச் சிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், பாகுபாட்டை நிரூபிக்க தவறிய அனைத்து புகார்கள் மீதும் அல்ல என்பதையும் ஒரு தீர்வு உறுதி செய்யக்கூடும் என்கிறது இந்து தலையங்கம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* உச்ச நீதிமன்றத்தின் தடையை தொடர்ந்து, யுஜிசி விதிகளின் முக்கிய அம்சங்களை ஒன்றிய அரசு மறுமதிப்பீடு செய்கிறது; அறிவிக்கப்பட்ட விதிகளில் இருந்து நீக்கப்பட்ட “பொய் புகார்கள்” குறித்த பிரிவை நீக்குவது குறித்து ஆலோசனை.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *