நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிப்பதை மட்டுமே படிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதா? இந்தப் படிப்பு மட்டுமே அறிவாகுமா? அறிவு வளர்ச்சிக்குரிய படிப்பு அனைத்துமே பள்ளிகளில் உள்ளதா? உலகத்தைப் படித்து – வளர்ச்சியைப் படித்து – நம் கண்முன் நடைபெறும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைப் பார்த்தறிந்து – ஆய்ந்தறிய வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
