மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது

3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப். 20- தனக்கு எதிராக அவதூறு பரப்பிய தற்காக 48 மணி நேரத்தில் பகி ரங்க, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்குரைஞர் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார்.

அப்போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2,039 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்ப தாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வழக்குரைஞர் ரிச்சர்ட்சன் வில் சன் ஆகியோர் அண்ணா மலைக்கு நேற்று (19.4.2023) அனுப்பியுள்ள தாக்கீதில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அப்பட்ட மான, அபாண்டமான, ஆதார மற்ற பொய்யான குற்றச்சாட்டை பாஜக தலைவர் அண்ணாமலை பொது வெளியில் சுமத்தியுள் ளார்.

சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற முறை யில் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகளுக்கு மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பும், நற்பெய ரும் உள்ளது. இந்த நிலையில், ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற காட் சிப் பதிவில் எந்த காரணமும் இல்லாமல், அரசியல் ஆதாயத் துக்காக உதயநிதி ஸ்டாலினின் மகன் மற்றும் மைனர் மகளின் பெயரையும் சேர்த்து வெளியிட்டிருப்பது குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதி ரானது மட்டுமின்றி, சட்டத் துக்கு புறம்பானது.

அவர்கள் திமுகவில் உறுப் பினர்களோ, நிர்வாகிகளோ கிடையாது. பொது வாழ்விலும் இல்லை. அவர்களது பெயரை யும் சேர்த்து வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. ரெட் ஜெயன்ட் மூவீஸின் பங்குதார ராக இருந்த உதயநிதி ஸ்டாலின், பொதுவாழ்வுக்கு வந்ததும், அந்த பொறுப்பில் இருந்து, பதவியிலிருந்து விலகிவிட்டார். 

அவர் பங்குதாரராக இருந்த போது ரெட் ஜெயன்ட் மூவீ ஸின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி  மட்டுமே. ஆனால், ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கு மட்டுமே ரூ.2,010 கோடி சொத்துகள் இருப்பதாகவும், வேட்புமனுவில் உதயநிதி தெரிவித்தபடி ரூ.29 கோடி சொத்துகள் இருப்பதா கவும், ஆக மொத்தம் ரூ.2,039 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானது.

2021 சட்டப்பேரவை தேர்த லின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில், உதயநிதி ஸ்டா லின் தனது சொத்து விவரங்கள், வாங்கிய கடன்களை வெளிப் படையாக தெரிவித்துள்ளார். அது பொது தளத்தில் உள்ளது. முறையாக வருமான வரித் துறை யில் ஆண்டுதோறும் கணக்கு விவரங்களை சமர்ப்பித்து வரு கிறார்.

இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2,039 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதா கவும், நோபிள் ஸ்டீல்ஸ் என்ற துபாய் நிறுவனத்தில் அங்கம் வகிப்பதாகவும் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது மட்டுமின்றி, பொதுவாழ்வில் உள்ள உதயநிதியின் புகழ், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடியது, அவதூறானது.

எனவே, அண்ணாமலை இதற்காக 48 மணி நேரத்தில் பகிரங்க, நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும். இல்லா விட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அவர் வழங்க வேண்டும். தவறினால் அண்ணா மலை மீது சிவில், கிரிமினல் சட்டத்தின்படி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *