தமிழ்நாட்டில் நிலநடுக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சிறீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.0-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதிய டைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முடிவுக்கு வருகிறதா
ஆர்.டி.அய். சட்டம்?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது. 2019-2020 காலக்கட்டத்தில் 13.7 லட்சமாக இருந்த ஆர்.டி.அய். விண்ணப்பங்கள் 2023-2024-இல் 17.5 லட்சமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை, அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் இச்சட்டம் பல நேரங்களில் தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், இதன் காரணமாக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கா லதாமதம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு
4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சார்புச் செயலாளர், பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 பணியிடங்கள் பதவி உயர்விற்குத் தகுதியானவை என அவர்களுக்கு வழங்க தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடிப் பணி நியமனத்தில் வழங்கப்படுவது போலவே, பதவி உயர்விலும் அதே 4 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்திய ஆயில் கார்ப்பரேஷனில்

394 பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷனில் 394 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறி விப்பு வெளியாகியுள்ளது. டெக்னீஷியன், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணி களுக்கு பயிற்சி வழங்கப்படு கிறது. டிகிரி, டிப்ளமோ, 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப் பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://iocl.com/apprenticships தளத்தில் பிப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கவும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *