கல்வி வளர்ச்சியில் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

மதுரை, ஜன.30 கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் (28.1.2026) நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கல்விப் புரட்சி

கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் நாடு அரசு உறுதியாக உள்ளது. பின் தங்கிய நிலையில் உள்ள மாணவா் களைக் கண்டறிந்து அவா்களை ஊக்கு விக்கும் வகையில் பல திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. தமிழ் வழியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கையில் முன்னுரிமை, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் மூலம் மாணவ, மாணவி களுக்கு மாத ஊக்கத் தொகை போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கலாம். ஆனால், மக்களின் சுகாதாரம், கல்வி வளா்ச்சி ஆகிய நிலைகளில் தமிழ்நாடு குஜராத்தை விட பல மடங்கு முன்னேறியுள்ளது. குஜராத்தில் 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளி மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கின்றனா். ஆனால், தமிழ் நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கின்றனா். தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு 4 மருத்துவா்கள் என்ற நிலை உள்ளது. ஆனால், குஜராத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையே உள்ளது. இதற்கு, 1921-இல் கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டம், பெண்களுக்கான வாக்குரிமை, இடஒதுக்கீடு போன்ற முற்போக்கான சட்டங்களே அடிப்படைக் காரணம்.

மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து, தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த சில மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப் படுகின்றன.

மடிக்கணினி

வெளிச் சந்தையில் ஒரு மடிக்கணினி குறைந்தபட்சம் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த நிலையில், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து நேரடியாக ஒப்பந்தப் புள்ளிகள் பெற்று, ஒரு மடிக்கணினி ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் என்ற விலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மடிக்கணினிகள், முந்தையக் காலங்களில் வழங்கப்பட்டதை விட பன்மடங்கு வேகமும், திறனும் கொண்டவை. இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டு வளமான வாழ்க்கையைப் பெறவேண்டும் என்றார் அவா்.

இதையடுத்து, 1,563 மாணவ, மாணவி களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணியை அவா் தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமார் தலைமை வகித்தார் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் முனைவா் வெ. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வ. தேன்மொழி, மதுரைக் கல்லூரி வாரிய பொருளாளா் ஆனந்த் சீனிவாசன், கல்லூரி முதல்வா் சுரேஷ், மதுரை மேற்கு வட்டாட்சியா் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *