20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.29 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று (28.1.2026) தொடங்கியது.

கல்வி உச்சி மாநாடு

தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்திய பன்னாட்டுக் கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் 2 நாட்கள் நடத்துகின்றன. கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டை தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று (28.1.2026) தொடங்கி வைத்து பேசியதாவது: சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் அடிப்படை கல்வி.

அதிகார அமைப்பை நோக்கி கேள்வி எழுப்பும் தைரியத்தை தரக்கூடிய சாதனம் கல்விதான். பழங்காலம் தொட்டே அறிவியல் சிந்தனையையும், பகுத்தறிவையும், கேள்வி கேட்பதையும் நாம் வலி யுறுத்தி வருகிறோம். முதல்வரின் காலை உணவு திட்டத்தை கனடா உள்பட பல்வேறு நாடுகள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகையில் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் ஜிடிபி-க்கு 9 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. கல்விதான் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் இணைப்பு சக்தி. இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை விருந்தினராகப் பங்கேற்ற ‘இந்து’ என்.ராம் பேசும்போது, “அதிகாரம் பெறுவதற்கான சக்திவாய்ந்த சாதனம் கல்வி.

காலம்காலமாக கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி அளிப்பது என்பது ஒரு சவாலான விசயம். அந்தப் பணியை செய்தது திராவிட இயக்கம். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதால்தான் தமிழ்நாடுஇன்றைய தினம் கல்வியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனை வோர்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டுப் பெண்கள் என்பது சாதாரண விசயம் அல்ல’’ என்றார். உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழக வேந்தர் ஹெல்மெட் கேர்ன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி நன்றி கூறினார்.

மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

இம்மாநாட்டில் இங்கி லாந்து, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா உள்பட 20 நாடு களைச் சேர்ந்த 400 பல்கலைக் கழகங்களின் பிரதி நிதிகள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் என 1000 பேர் பங்கேற்றுள்ளனர்.

வெளிநாட்டு பல்கலை.களின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இன்று (29.1.2026) நடைபெறும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பேசுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *