ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழன் குமாரசாமி எசுதர் கடந்த 5 ஆண்டுகளாகத் தாம் விடுதலை சந்தா வழங்குவதோடு – சீரங்கன் என்ற தோழரின் “நியூ சோபனா” முடித்திருத் தகத்திற்கும் தன் பொறுப்பில் ‘விடுதலை’ சந்தா வழங்கி வருகின்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ம.காமராஜ் காந்தி கிராமம் – வாசகர்கள் படிப்பதற்கு காந்தி கிராமம் அண்ணா படிப்பகத் திற்கு ‘விடுதலை’ சந்தா வழங்கி வருகின்றார். இவ்விரு தோழர்களுக்கும் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
