தேசிய வாக்காளர் நாளை (25.1.2026) முன்னிட்டு தேர்தல் பணிகளில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை மாவட்டம் தேசிய அளவில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 25.01.2026 அன்று டில்லியில் நடைபெற்ற விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பட்டயமும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்தார். விருது பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிர்வாகக் குழு, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
