ஆளுநர் விவகாரம்: நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன 25 “சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் திமுக போராடும்” என தமிழ்நாடு முதல மைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கரு நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்.அய்.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது

நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.25 எஸ்.அய்.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எங்கெல்லாம் எஸ்.அய்.ஆர். பணிகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் வாக்கு திருட்டு நடந்துவருகிறது என குஜராத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் சில நாட்களில் 12 லட்சம் ஆட்சேபனைகள் வந்த நிலையில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது சமூக வலைதள பதிவில்:

குஜராத்தில் எஸ்.அய்.ஆர்.  என்ற பெயரில் செய்யப்படு வது எந்த வகையான நிர்வாக செயல்முறையும் அல்ல – இது திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் மூலோபாய வாக்கு திருட்டு. மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆபத்தான விடயம் என்னவென்றால், ஆயிரக்க ணக்கான ஆட்சேபனைகள் ஒரே பெயரில் தாக்கல் செய்யப்பட்டன.

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில், குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச்சாவ டிகளின் வாக்குகள் வெட்டப்பட்டன. பாஜக தோல்வியைக் காணும் இடங்களில், வாக்காளர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இந்த முறை ஆலந்தில் காணப்பட்டது. ராஜுராவில் இதுதான் நடந்தது. இப்போது குஜராத், ராஜஸ்தான் மற்றும் எஸ்.அய்.ஆர்.  திணிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அதே வரைபடம் செயல்படுத்தப்படுகிறது.

‘‘ஒரு நபர், ஒரு வாக்கு’’ என்ற அரசியலமைப்பு உரிமையை ஒழிப்பதற்கான ஒரு ஆயுதமாக எஸ்.அய்.ஆர்.  மாற்றப்பட்டுள்ளது – இதனால் மக்கள் அல்ல, பாஜக யார் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. மேலும் மிகவும் தீவிரமான உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இனி ஜனநாயகத்தின் பாதுகாவலர் அல்ல, ஆனால் இந்த வாக்கு திருட்டு சதியில் முக்கிய பங்காளியாக மாறியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *