பிச்சையா அல்லது கொள்ளையா?
தலைநகர் டில்லியில் காளி வேடமிட்டவர்கள் கையில் கத்தியை வைத்துகொண்டு சில்லரைகளைத் தரும் கடைக்காரர்களை மிரட்டி 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடு என்று மிரட்டுகிறார்கள்.

காவல் துறையினரிடம் புகார் கூறினால், “கொடுத்து தொலைய வேண்டியதுதானே! ஏன் அவர்களிடம் பிரச்சினை செய்கிறாய்?” என்கிறார்கள்.
கங்கைக்கு பால் அர்ப்பணம்!
வாரணாசியில் கங்கைக்கு அர்ப்பணம் என்ற பெயரில் குறைந்த பட்சம் 5 லிட்டர் அதிக பட்சம் 100 லிட்டர் பாலை ஊற்றுவார்கள்
அப்படி வாரணாசியில் உள்ள அரிச்சந்திர காட் என்ற பகுதியில் ஆற்றில் பாலை ஊற்றும் போது “கொஞ்சம் சட்டியில் ஊற்றுங்க” என்று கெஞ்சும் பிள்ளைகளை விரட்டும் கொடூரம் நடக்கும்.

மச்சவதாரமா?
பொதுவாக வட இந்தியாவில் ஆற்றுமீன்களை உயிரோடு சட்டி பானை மற்றும் பிளாஸ்டிக் தட்டில் வைத்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். உயிருள்ள மீன்கள் என்றால்தான் பெரும்பாலானோர் வாங்குவார்கள்.
இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் விற்பனைக்காக உயிருள்ள மீனை வைத்திருந்துள்ளார்கள். ஆனால், கோயிலுக்கு வந்த மூடர்கள் சிலர் அதையும் சாமி என்று நினைத்து சில்லரைகளைப் போட்டுள்ளனர். மீன் கடைக்காரர் பார்த்தார் நல்ல பிசினஸா இருக்கே என்று கூறி இரண்டு மீன்களைக் கொண்டுவந்து பிளாஸ்டிக் தட்டில் தண்ணீர் ஊற்றி தட்டுக்கு சந்தனக் குங்குமப் பொட்டு வைத்தார்.
மச்சவதாரக் கோயில் ரெடி! வருமானமும் குவிகிறது!
